LATEST
இலங்கையை நெருங்கும் ஆறாவது பேரிடர் சவால் – சஜித் எச்சரிக்கை!முன்னாள் கடற்படைத் தளபதி காஞ்சன பானகொடவுக்கு புதிய பதவி!சர்வதேச நாய்கள் தினம் இன்றுசாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு – அதிவேக நெடுஞ்சாலைகளில் நெரிசல்!கண்டி பெரஹெரா – வாகனங்களுக்கு மாற்றுப் பாதைகள் அறிவிப்பு!நபிகள் நாயகம் காட்டிய நல்வழியை நினைவுகூரும் புனித நாள்!வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!இலங்கையை நெருங்கும் ஆறாவது பேரிடர் சவால் – சஜித் எச்சரிக்கை!முன்னாள் கடற்படைத் தளபதி காஞ்சன பானகொடவுக்கு புதிய பதவி!சர்வதேச நாய்கள் தினம் இன்றுசாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு – அதிவேக நெடுஞ்சாலைகளில் நெரிசல்!கண்டி பெரஹெரா – வாகனங்களுக்கு மாற்றுப் பாதைகள் அறிவிப்பு!நபிகள் நாயகம் காட்டிய நல்வழியை நினைவுகூரும் புனித நாள்!வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!
உள்ளூர்

மாத சம்பளத்தை கட்சி நிதிக்கு மாற்றுவது ஊழல் – கம்மன்பில முறைப்பாடு.

September 29, 2025 · Tamil Ceylon LK

பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொது நிதியை தவறாக பயன்படுத்துவதாக இன்று (29) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தார்.

அவரின் கூறலின்படி, 159 பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கான மாத சம்பளத்திலிருந்து ஒரு பகுதியை கட்சி நிதியாக மாற்றி, அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகின்றனர். இது சட்டவிரோதமானது என்றும், பொது நிதியின் தவறான பயன்பாடாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் உதய கம்மன்பில கருத்து தெரிவிக்கையில்,

தொலைபேசி, எரிபொருள், அலுவலக பராமரிப்பு முதலான வசதிக்கென வழங்கப்படும் நிதியும் கட்சி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவது ஊழலுக்கே சமமானது எனக் கூறினார்.

மேலும், இந்த விடயத்தில் ஜனாதிபதி உட்பட 160 பேர் தொடர்புடையவர்கள் எனவும், அவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கம்மன்பில வலியுறுத்தினார்.

Related Stories

மேலும் ›