13வது மகளிர் உலகக் கிண்ணம் – இன்று ஆரம்பம்.
13வது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை)...
13வது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி நவம்பர் 2ஆம் திகதி வரை இந்தியாவின் கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம், மும்பை மற்றும் இலங்கையின் கொழும்பு ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது.
13வது மகளிர் உலகக் கிண்ண தொடரில் இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆபிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
– இந்திய மகளிர் அணியில்,
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிர்தி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், உமா சேத்ரி, ரிச்சா கோஷ், கிரந்தி கவுட், அமன்ஜோத் கவுர், சினே ராணா, அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ஸ்ரீ சரனி, ராதா யாதவ்.
– இலங்கை மகளிர் அணியில்,
சமாரி அத்தபத்து (கேப்டன்), அனுஷ்கா சஞ்சீவனி, கவிஷா தில்ஹரி, இமிஷா துலானி, விஷ்மி குணரத்ன, அச்சினி குலசூர்ய, சுகந்திகா குமாரி, மால்கி மதர, ஹாசினி பெரேரா, வத்சலா, உதேஷிகா பிரபோதனி, இனோகா ரனவீர, ஹர்ஷிகா சமரவிக்ரமா, நிலக்ஷிகா சில்வா, தேமி விஹாங்க.
13 ஆவது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. இப் போட்டி பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
