சட்டவிரோத ஜோதிட நிலையம் அமைப்பு – பொலிஸார் விசாரணை !
பருத்தித்துறை தும்பளை பிரதேசத்தில் சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வந்த மூவர்,
பருத்தித்துறை தும்பளை பிரதேசத்தில் சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வந்த மூவர், சட்டவிரோத ஜோதிட நிலையம் அமைத்து இயங்கி வந்துள்ளனர் . குறித்த நிலையம் தொடர்பாக தும்பளை பிரதேச கிராம அலுவர் பருத்தித்துறை நகரசபை தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் நேற்று முன்தினம் பருத்தித்துறை நகர பிதா நேரில் சென்று அவதானித்து குறித்த இந்தியர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
ஆனாலும் நேற்று(30) ஜோதிட நிலையம் இயங்கி வந்த நிலையில் நகரபிதா வின்சன் டீ டக்ளஸ் போல் பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியபோது சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இந்தியப் பிரஜைகளன் கடவுச் சீட்டை பரிசோதனை மேட்கொண்டனர். குறித்த மூவரும் சுற்றுலா வீசாவில் நாட்டிற்குள் நுழைந்தமை தெரியவந்தது.
இதனையடுத்து சட்டவிரோத ஜோதிட நிலையம் அமைத்து இயக்கி வந்த மூன்று இந்தியப் பிரஜைகளையும் பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.