நாட்டில் எரிபொருள் விலை குறைப்பு.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், மாதாந்த விலை திருத்தத்தின்...
Published October 1, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், மாதாந்த விலை திருத்தத்தின் பேரில் இன்று (30) நள்ளிரவு முதல் சில எரிபொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
– வெள்ளை டீசல் ரூ.6 குறைக்கப்பட்டு புதிய விலையாக ரூ.277 நிற்னையிக்கப்பட்டுள்ளது.
– ஒக்டேன் 95 பெற்றோல் ரூ.6 குறைக்கப்பட்டு புதிய விலையாக ரூ.335 நிற்னையிக்கப்பட்டுள்ளது.
– மண்ணெண்ணெய் – ரூ.5 குறைக்கப்பட்டு புதிய விலையாக ரூ.180 நிற்னையிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒக்டேன் 92 மற்றும் லங்கா சூப்பர் டீசலின் விலைகளில் மாற்றமில்லை என தெரிவித்துள்ளது.
இதேவேளை, லங்கா IOC நிறுவனமும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை மாற்றத்திற்கேற்ப தங்களது விலைகளும் திருத்தப்படும் என அறிவித்துள்ளது.