பிரதமர் – ஆஸ்திரிய தூதுவர் சந்திப்பு.

இலங்கைக்கான ஆஸ்திரிய தூதுவர் கத்தரினா வீசர் தனது பதவிக்காலம்...

Published October 1, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

இலங்கைக்கான ஆஸ்திரிய தூதுவர் கத்தரினா வீசர் தனது பதவிக்காலம் முடிவடைந்ததை முன்னிட்டு நேற்று 2025 செப்டம்பர் 30 அன்று அலரி மாளிகையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்தார்.

பிரதமர், ஆஸ்திரியாவின் தொழில்நுட்ப மற்றும் நிலையான எரிசக்தித் துறைகளில் முதலீடுகளுக்கான பங்கீட்டையும், இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்திய தூதுவரின் பங்களிப்பையும் பாராட்டினார்.

கல்விச் சீர்திருத்தங்கள், மற்றும் ஆஸ்திரியா – இலங்கை ஒத்துழைப்பு விரிவாக்கம் குறித்து இருவரும் விரிவாக கலந்துரையாடினர்.

ஆஸ்திரிய தூதுவர், இலங்கையின் நிலைமாற்ற முயற்சிகளைப் பாராட்டி, ஆஸ்திரிய கல்விமுறையைப் பற்றிய தகவல்களை பகிர்ந்தார்.

மேலும், ஆஸ்திரியப் பிரஜைகள் இலங்கைக்கு வருகை தர வேண்டும் எனவும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *