அதிகரித்தது செப்டெம்பர் மாத சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை.
நாட்டில் செப்டெம்பர் மாதத்தில் மொத்தம் 158,971 சுற்றுலாப் பயணிகள்
Published October 2, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
நாட்டில் செப்டெம்பர் மாதத்தில் மொத்தம் 158,971 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழுவின் தரவுகள் வெளியிட்டுள்ளன.
அதன்படி, இந்தியாவிலிருந்து மொத்தம் 49.697 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இது 31.3% ஆகும்.
செப்டெம்பர் மாதத்தில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 10,752 பேரும்
சீனாவிலிருந்து 10,527 பேரும்,
ஜெர்மனியிலிருந்து 9,344 பேரும்
அவுஸ்திரேலியாவிலிருந்து 9,105 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதற்கிடையில் 2025 ஆண்டில் இது வரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,725,494 ஆக அதிகரித்துள்ளது.