மின்சாரக் கட்டண உயர்வு – இம் மாத இறுதிக்குள் PUCSL முடிவு.

இலங்கை மின்சார சபை (CEB) முன்வைத்த 6.8% மின்சாரக் கட்டண உயர்வு...

Published October 4, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

இலங்கை மின்சார சபை (CEB) முன்வைத்த 6.8% மின்சாரக் கட்டண உயர்வு குறித்த முடிவை, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) இந்த மாதத்தின் இரண்டாவது வார இறுதிக்குள் அறிவிக்கப்படவுள்ளது.

CEB கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்த உயர்வை கோரி முன்மொழிவு சமர்ப்பித்திருந்தது.

அதற்கமைய, கிழக்கு மாகாணத்தில் செப்டம்பர் 18 அன்று பொதுமக்களிடம் வாய்மூல கருத்து பெறும் செயல்முறை ஆரம்பிக்கப்பட்டது. நாட்டின் 8 மாகாணங்களில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இறுதி கருத்து பெறும் அமர்வு அக்டோபர் 8ஆம் தேதி மேல் மாகாணத்தில் நடைபெற உள்ளது.

PUCSL தற்போது மின்சார சபையின் எரிபொருள், உற்பத்தி, விநியோகம் மற்றும் கடன் செலவுகளை ஆய்வு செய்து வருகிறது. இதன் பின்னர், மின்சாரக் கட்டண திருத்தம் குறித்த இறுதி அறிக்கை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *