சட்டவிரோதமாக வௌிநாட்டு சிகரட்டுக்கள் கடத்தல் – ஒருவர் கைது.
வௌிநாட்டு சிகரட்டுக்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள்...
வௌிநாட்டு சிகரட்டுக்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்த முற்பட்ட ஒருவரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட வௌிநாட்டு சிகரட்டுக்களின் பெறுமதி 45 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கைதானவர் புத்தளம், கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் இன்று (5) அதிகாலை 05.25 மணிக்கு ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் UL-226 என்ற விமானத்தின் ஊடாக டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்த நிலையில், முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது அவரது பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 30,000 சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், கைதானவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.