LATEST
தங்கப் பதக்கத்துக்காக களமிறங்கும் இலங்கை–இந்தியா மகளிர் அணிகள்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – உயர் நீதிமன்றம்புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – தென்மேற்கில் கனமழை தொடரும்!மத்திய மாகாணத்தில் 35 உட்பட 38 பாடசாலைகள் இன்று இயங்காது!கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு!அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து – பலர் காயம்!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – ஆனால் மழை நிலை தொடரும்!தங்கப் பதக்கத்துக்காக களமிறங்கும் இலங்கை–இந்தியா மகளிர் அணிகள்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – உயர் நீதிமன்றம்புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – தென்மேற்கில் கனமழை தொடரும்!மத்திய மாகாணத்தில் 35 உட்பட 38 பாடசாலைகள் இன்று இயங்காது!கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு!அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து – பலர் காயம்!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – ஆனால் மழை நிலை தொடரும்!
உள்ளூர்

வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்து: இளைஞன் மரணம்

October 6, 2025 · Tamil Ceylon LK

வவுனியா- இராசேந்திரம்குளம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டர் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, இராசேந்திரகுளம் பகுதியில இருந்து நெளுக்குளம் நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்றில் மூன்று இளைஞர்கள் பயணித்துள்ளனர். குறித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில்  இராசேந்திரன்குளம் பாடசாலைக்கு அருகில் உள்ள பேரூந்து தரிப்பு நிலையத்துடன் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் சாம்பல்தோட்டம் பகுதியைச் சேர்ந்த  கோபால்ராஜ் நிலக்சன் (வயது 18) என்பவரே மரணமடைந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள். 

Related Stories

மேலும் ›