இந்திய அணியின் புதிய ODI தலைவர் – சுப்மன் கில்.
அஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள்...
Published October 7, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
அஸ்திரேலியா அணியுடனான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு சுப்மன் கில் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய அணித்தலைவராக சுப்மன் கில், துணைத்தலைவராக ஸ்ரேயாஸ் ஐயரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுநாள் வரை இந்திய அணியின் அணித்தலைவராக செயற்பட்டு வந்த ரோஹித் சர்மா, பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரத்தில் அணியில் அனுபவம் வாய்ந்த நட்சத்திர துடுப்பாட்ட வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி இடம் பெற்றுள்ளனர்.
அதேபோல் T20 போட்டிகளுக்கான இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் அணித்தலைவராகவும் , சுப்மன் கில் துணைத்தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.