பொன்சேகாவை தாக்கிய மஹிந்தவின் ஊடகப் பேச்சாளர்.
" நாய் குரைப்பதால் சிங்கம் அஞ்சாது." என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...
Published October 8, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
” நாய் குரைப்பதால் சிங்கம் அஞ்சாது.” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.
– அவர் மேலும் தெரிவிக்கையில்,
இறுதிப்போரின்போது மஹிந்த ராஜபக்ஷ வால் போர் நிறுத்தம் வழங்கப்பட்டது என்பது உட்பட பொன் சேகாவால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளையும் அவர் முற்றாக நிராகரித்தார்.
“வெள்ளைக்கொடி கதையைக் கூறி படையினரைக் காட்டிக் கொடுத்த நபர் தான் பொன்சேகா. இது நாட்டு மக்களுக்கும் தெரியும்”
அரசியல் ரீதியில் வங்குரோத்தடைந்துள்ள பொன்சேகா, இன்னமும் போர் மனோநிலையிலேயே காணப்படுகின்றார் எனவும் மஹிந்தவின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.