மாத்தறையில் பொலிஸார் துப்பாக்கி சூடு.
மாத்தறை, வெல்லமடம பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த...
Published October 8, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
மாத்தறை, வெல்லமடம பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், பொலிஸ் அதிகாரிகள் காரை நோக்கி பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
நிற்காமல் சென்ற மோட்டார் வாகனம், பின்னர் மாத்தறை, ஜனராஜா மாவத்தையில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மோட்டார் வாகனத்தில் இரண்டு பேர் பயணித்திருந்த நிலையில், அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் வாகனத்தின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.