பாரிய இலாபத்தை ஈட்டிய கொழும்பு துறைமுகம்.
2025 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் கொழும்பு துறைமுகம்...
2025 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் கொழும்பு துறைமுகம் ரூ. 32 பில்லியன் நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இது 71% வளர்ச்சியாகுமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் கொழும்பு துறைமுகம் ரூ. 32.2 பில்லியன் நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. 2024 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் ஈட்டிய நிகர லாபம் ரூ. 18.9 பில்லியன் ஆகும். 2024 உடன் ஒப்பிடும்போது 2025 இல் நிகர லாபத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு சுமார் ரூ. 13 பில்லியன் ஆகும். இது 71% சதவீத அதிகரிப்பாகும்.
2025 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களுக்கான மதிப்பிடப்பட்ட லாபம் சுமார் ரூ. 21 பில்லியன் ஆகும், இது மதிப்பிடப்பட்ட இலக்கை விட ரூ. 11 பில்லியன் அதிகமாகும். தொடர்ச்சியான மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் சேவை செயல்திறன் ஆகியவற்றின் விளைவாக கொள்கலன் கையாளுதல்.கிழக்கு முனையம் மற்றும் ஜெயா கொள்கலன் முனையம் போன்ற கட்டுமானத் திட்டங்கள் நிறைவடைவதன் மூலம் எதிர்காலத்தில் திறனை மேலும் அதிகரிக்க எதிர்பார்ப்பதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது 2024 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களுடன் ஒப்பிடும்போது சுமார் 6% வளர்ச்சியைக் காட்டுகிறது.
முனைய சேவை ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்பட்டதன் காரணமாக அதிகரித்த வருவாய், அதிகரித்த திறன் மற்றும் செலவு மேலாண்மை போன்ற காரணிகளால் எதிர்பார்த்த இலக்குகளை விட அதிகமான லாபத்தை அடைய முடிந்தது என்று இலங்கை துறைமுக அதிகாரசபை நம்புகிறது.
இந்த இலாபத்தைப் பயன்படுத்தி கொழும்பு துறைமுகத்தை ஒரு கப்பல் போக்குவரத்து மையமாக மாற்றுவதற்கான எதிர்கால திட்டங்களை செயல்படுத்த நம்புவதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.