LATEST
பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!மனித உரிமைகள், நல்லாட்சி குறித்து இலங்கையிடம் EU எதிர்பார்ப்பு!நீர் திட்டத்தை மீள ஒப்படைக்கக் கோரி கிராம மக்கள் போராட்டம்!இறுதிச் சடங்கிற்கு தயாரான குடும்பம் – உயிருடன் வந்த நபர்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் – மனுவில் வலியுறுத்தல்!குறைந்த வருமான குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புதிய கல்வி உதவி!உள்நாட்டு அரிசி உபரி இருக்க இறக்குமதி ஏன்? – சஜித் கேள்வி!ஓய்வு வயதை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதில் பிரச்சினையில்லை!பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!மனித உரிமைகள், நல்லாட்சி குறித்து இலங்கையிடம் EU எதிர்பார்ப்பு!நீர் திட்டத்தை மீள ஒப்படைக்கக் கோரி கிராம மக்கள் போராட்டம்!இறுதிச் சடங்கிற்கு தயாரான குடும்பம் – உயிருடன் வந்த நபர்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் – மனுவில் வலியுறுத்தல்!குறைந்த வருமான குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புதிய கல்வி உதவி!உள்நாட்டு அரிசி உபரி இருக்க இறக்குமதி ஏன்? – சஜித் கேள்வி!ஓய்வு வயதை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதில் பிரச்சினையில்லை!
உள்ளூர்

பூஸா சிறையுள்ளே சிக்கிய பொருள்கள்

October 10, 2025 · Tamil Ceylon LK

கடுமையான குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில் 29 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டன.

நேற்று (09) காலை 6.00 மணியளவில் சிறைச்சாலை புலனாய்வு மற்றும் தந்திரோபாயப் பிரிவு மற்றும் காவல்துறை சிறப்புப் பணிக்குழு இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது சிறைச்சாலையின் ஏ, சி மற்றும் டி பிரிவுகளில் இந்த கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

சிறப்பு பிரிவு கைதிகளின் பகுதியிலும் மீட்கப்பட்ட கைபேசிகள்

சிறப்புப் பிரிவு கைதிகளான “தெமட்டகொட சமிந்த”, “வெலே சுதா” மற்றும் “மிதிகம ருவான்” ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையின் ஏ பிரிவிலும் கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ஜெகத் வீரசிங்க தெரிவித்தார்.

Related Stories

மேலும் ›