LATEST
மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை – கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!உரிமம் முதல் தயாரிப்பு திகதி வரை சர்ச்சை – டின் மீன் நிறுவனம் சிக்கியது!நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.ரஷ்ய எண்ணெய் இறக்குமதி – இந்தியா, சீனாவுக்கு புதிய நெருக்கடி?உச்சம் தொட்ட தங்கம்… இன்று விலை சரிவு!உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு – பரீட்சைத் திணைக்களம் முக்கிய அறிவிப்பு!சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு புதிய நியமனங்கள்!எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு இல்லை – சபையில் திட்டவட்ட விளக்கம்!மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை – கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!உரிமம் முதல் தயாரிப்பு திகதி வரை சர்ச்சை – டின் மீன் நிறுவனம் சிக்கியது!நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.ரஷ்ய எண்ணெய் இறக்குமதி – இந்தியா, சீனாவுக்கு புதிய நெருக்கடி?உச்சம் தொட்ட தங்கம்… இன்று விலை சரிவு!உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு – பரீட்சைத் திணைக்களம் முக்கிய அறிவிப்பு!சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு புதிய நியமனங்கள்!எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு இல்லை – சபையில் திட்டவட்ட விளக்கம்!
உள்ளூர்

பிரசித்தி பெற்ற திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு. #Video

October 11, 2025 · Tamil Ceylon LK

கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு வைபவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ நேற்று ( 10 ) வெகு விமர்சையாக நடைபெற்றது.

மகா பாரதக் கதையினை மையமாக கொண்டு பாண்டிருப்பு திரெளபதி அம்மன் ஆலய உற்சவம் 18 தினங்கள் நடைபெறுவது வழக்கமாகும். கடந்த செப்டம்பர் 23 ஆம் திகதி திருக்கதவு திறத்தல், கொடியேற்றத்துடன் ஆலய உற்சவம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ் உற்சவத்தில் பாண்டவர்கள் நாடு நகர் இழந்து வனவாசம் செல்லும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

9 ஆம் திகதி அருச்சுனன் தவநிலை செல்லல் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பாண்டவர்கள், திரெளபதை , கிருஷ்ணர் தேவாதிகள் தீ மிதிப்பில் ஈடுபடும் நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

நாளை சனிக்கிழமை தீக்குழிக்கு பால்வார்க்கும் பாற்பள்ளயம் சடங்குடன் உற்சவம் நிறைவுபெறவுள்ளமை சிறப்பம்சமாகும்.

Related Stories

மேலும் ›