மகளிர் உலகக் கிண்ணம்: இந்தியா – ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை.
13வது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது...
Published October 12, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
13வது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந் தொடரில் விசாகப்பட்டினத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 13வது லீக் ஆட்டத்தில்
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப் போட்டியில் நாணயற்சுழற்சியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ள நிலையில், இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.