LATEST
இலங்கையை நெருங்கும் ஆறாவது பேரிடர் சவால் – சஜித் எச்சரிக்கை!முன்னாள் கடற்படைத் தளபதி காஞ்சன பானகொடவுக்கு புதிய பதவி!சர்வதேச நாய்கள் தினம் இன்றுசாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு – அதிவேக நெடுஞ்சாலைகளில் நெரிசல்!கண்டி பெரஹெரா – வாகனங்களுக்கு மாற்றுப் பாதைகள் அறிவிப்பு!நபிகள் நாயகம் காட்டிய நல்வழியை நினைவுகூரும் புனித நாள்!வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!இலங்கையை நெருங்கும் ஆறாவது பேரிடர் சவால் – சஜித் எச்சரிக்கை!முன்னாள் கடற்படைத் தளபதி காஞ்சன பானகொடவுக்கு புதிய பதவி!சர்வதேச நாய்கள் தினம் இன்றுசாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு – அதிவேக நெடுஞ்சாலைகளில் நெரிசல்!கண்டி பெரஹெரா – வாகனங்களுக்கு மாற்றுப் பாதைகள் அறிவிப்பு!நபிகள் நாயகம் காட்டிய நல்வழியை நினைவுகூரும் புனித நாள்!வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!
உலகம்

கரூர் சம்பவம் – உச்சநீதிமன்றில் நாளை உத்தரவு.

October 12, 2025 · Tamil Ceylon LK

தமிழ்நாட்டின் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த சிறுவனின் தந்தை தாக்கல் செய்த மனுவும், தமிழக அரசின் மனுவும் தொடர்பான உத்தரவை உச்சநீதிமன்றம் நாளை திங்கட்கிழமை அக்டாபர்.13 வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவை நாளை விசாரணைக்கு வரும் வழக்குகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன், நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சாரியா அடங்கிய அமர்வு, சம்பந்தப்பட்ட தரப்புகளின் வாதங்களை கேட்டுப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் த.வெ.க வின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கைதாகாமல் இருக்க இருவா் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழியாக அக்டோபர் 3 அன்று நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›