நாட்டில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.

நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

Published October 13, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை அல்லது சில இடங்களில் சுமார் 75 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேலும், இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைத்து கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம். பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *