இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் மைத்திரி 5 மணிநேர வாக்கு மூலம்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) காலை...
Published October 13, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஆஜராகி, சுமார் 5 மணித்தியாலம் வாக்குமூலம் அளித்த பின்னர், மதியம் 2.00 மணியளவில் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார்.
சுமார் 15 வருடங்களுக்கு முன்பு நடந்ததாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலமளிக்கவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆஜராகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.