LATEST
சமூக வலைத்தளத்தில் வைரலாகும் 80கள் படம்!ஜனாதிபதிக்கும் இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு!ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் புதிய தலைமை!சர்வதேச எண்ணெய் விலை மீண்டும் உச்சம்!கபில சந்திரசேனவின் கைபேசி தரவு விசாரணையில்!குதியற்ற வாகனங்களுக்கு நடவடிக்கை தயாராகிறது!உற்பத்திச் செலவு அதிகரிப்பு: டின் மீன் விலை உயர்த்த கோரிக்கை!ராஜ்நாத் சிங் வருகையில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!சமூக வலைத்தளத்தில் வைரலாகும் 80கள் படம்!ஜனாதிபதிக்கும் இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு!ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் புதிய தலைமை!சர்வதேச எண்ணெய் விலை மீண்டும் உச்சம்!கபில சந்திரசேனவின் கைபேசி தரவு விசாரணையில்!குதியற்ற வாகனங்களுக்கு நடவடிக்கை தயாராகிறது!உற்பத்திச் செலவு அதிகரிப்பு: டின் மீன் விலை உயர்த்த கோரிக்கை!ராஜ்நாத் சிங் வருகையில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!
உள்ளூர்

சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் – பிரதமர் ஹரிணி சந்திப்பு.

October 14, 2025 · Tamil Ceylon LK

சீனா விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய பீஜிங்கில் அமைந்துள்ள சீன தேசிய மாநாட்டு மையத்தில் (CNCC) நடைபெற்ற உலகத் தலைவர்களின் பெண்கள் பற்றிய மாநாடு 2025 இல் கலந்துகொண்டார்.

இந்நிலையில் இன்று (14) பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் (People’s Great Hall) இலங்கைப் பிரதமர் கலாநிதி கலாநிதி ஹரிணி அமரசூரியாவை சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் சந்தித்துள்ளார்.

சீனா – இலங்கை நீண்டகால பாரம்பரிய நட்பைக் கொண்டுள்ள நிலையில், அமைதி மற்றும் சகவாழ்வு என்ற ஐந்து அம்சக் கொள்கையின் அடிப்படையில் இருதரப்பு உறவுகளைத் தொடர்ந்து வளர்த்து வருகின்றன என்று ஜி ஜின்பிங் தெரிவித்தார்.

மேலும், இது பல்வேறு நாடுகளுக்கு இடையே நட்புரீதியான நடத்தை மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்புக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. சீனா அதன் அண்டை நாடுகளுடனான இராஜதந்திரத்தில் இலங்கைக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கும் என்று சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Related Stories

மேலும் ›