மனுஷவின் முன்பிணை மனு நிராகரிப்பு !
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த முன்பிணை...
Published October 14, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த முன்பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், மனுஷ நாணயக்கார நாளை (15) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் அளிப்பார் என்று அவரது சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் விவசாய வேலைகளுக்காக இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவதில் நடந்த முறைகேடுகள் குறித்து இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை நடத்தி வருவதாகவும், அந்த விசாரணையின் விளைவாக தான் கைது செய்யப்படும் அபாயம் இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.