மூன்று பொலிஸ் குழுக்கள் தீவிர விசாரணை.
பாதாள உலகக் குழுத் தலைவர் சஞ்சீவ குமார...
பாதாள உலகக் குழுத் தலைவர் சஞ்சீவ குமார சமரரத்ன அல்லது “கணேமுல்ல சஞ்சீவ” கொலை தொடர்பாக தேடப்பட்டு தப்பியோடிய பெண் சந்தேகநபர் “இஷாரா செவ்வந்தி” உட்பட ஆறு சந்தேகநபர்கள் நேபாளில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட நிலையில், அவர்களை மூன்று பொலிஸ் குழுக்கள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றன.
இஷாரா செவ்வந்தியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது சஞ்சீவவின் கொலை தொடர்பான பல முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, இஷாரா செவ்வண்தி, தக்ஸி என்று அழைக்கப்படும்”டூப்ளிகேட் இஷாரா”, “ஜே.கே. பாய்” மற்றும் “யாழ் சுரேஷ்” ஆகியோர் கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறே “கம்பா பாபா” என்று அழைக்கப்படுபவரை மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார், அதே நேரத்தில் “நுகேகொட பாபி” என்பவரிடம் மற்றுமோர் பொலிஸ் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.