இலங்கையில் உச்சம் தொட்ட தங்கம் விலை.
இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின்...
Published October 17, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 4 லட்சத்தை கடந்துள்ளது.
இதன்படி 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 4 லட்சத்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இதன் விலை இன்று 15 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது.
மேலும், 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் 13 ஆயிரத்து 800 ரூபாய் அதிகரித்து 379 ஆயிரத்து 200 ரூபாயாக காணப்படுகிறது.