மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரிக்கு தொடரும் விளக்கமறியல்.
28 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை முறைக்கேடாக...
Published October 17, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
28 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை முறைக்கேடாக ஈட்டியதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி, எதிர்வரும் ஒக்டோபர் 31ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்படுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, இரு தரப்பின் வாதங்களையும் பரிசீலித்த நீதவான் அசங்க எஸ். போதரகம, மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கும் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.