தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாடசாலைகள் விடுமுறை.
மத்திய மாகாணத்தின் அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும்...
Published October 17, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
மத்திய மாகாணத்தின் அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும், ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்கு தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் (21.10.2025) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நுவரெலியா கல்வி வலயத்தின் நிர்வாகத்திற்குப் பொறுப்பான பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.கணேஸ்ராஜ் பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மேலும்,இவ்விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் (25) சனிக்கிழமை பாடசாலைகளை நடாத்துமாறு சகல அதிபர்களுக்கு மத்திய மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.