வங்கதேசத்தில் மீண்டும் போராட்டம்

புதிய அரசியல் சட்டத்தை எதிர்த்து வங்கதேசத்தில் போராட்டம் வெடித்துள்ளது. போராட்டக்காரர்களை

Published October 18, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

புதிய அரசியல் சட்டத்தை எதிர்த்து வங்கதேசத்தில் போராட்டம் வெடித்துள்ளது. போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் விரட்டியடித்தனர்.

வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் தற்போது ,இடைக்கால அரசு நடைபெற்று வருகிறது. இந்த இடைக்கால அரசு இன்று(ஒக்.17) புதிய அரசியல் சாசனத்தை வெளியிட்ட

இந்த சாசனத்தை எதிர்த்து அந்நாட்டில் பெரும் வன்முறை வெடித்துள்ளது. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், அந்நாட்டின் நாடாளுமன்ற வளாகம் முன்பு கூடி போராட்டத்தில் இறங்கினர்.

இதையடுத்து, அவர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் காவல்துறையின் வாகனங்களை அடித்து நொறுக்கினர். மேலும்காவல்துறையினர் தங்கியிருந்த கூடாரங்களையும் சேதப்பபடுத்தினர்.

போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தியதோடு, கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். தொடர்ந்து, பதற்றமான சூழல் நிலவுவதால் கூடுதல் பாதுகாப்புக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உலகம் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *