மட்டக்களப்பு பிரதேச சபை உறுப்பினர் வீடுக்கு தீ வைப்பு
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருகாமம் பகுதியில் உள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை பிரதேச சபை உறுப்பினர் சி. சர்வநந்தன் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருகாமம் பகுதியில் உள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை பிரதேச சபை உறுப்பினர் சி. சர்வநந்தன் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

இதனால் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்ததாகவும், வீட்டின் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதோடு, வீட்டு உபயோகப் பொருட்கள், கதவுகள், ஜன்னல்கள் மற்றும் கூரையின் சில பகுதிகளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சம்பவம் என உறுப்பினர் சர்வநந்தன் குற்றம் சாட்டியுள்ளதோடு இது தொடர்பில் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளார்
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்