சொகுசு பேரூந்து மதவாச்சி பிரதான வீதியில் விபத்து
கொழும்பிலிருந்து மன்னார் நேற்று செவ்வாய்க்கிழமை (21) இரவு பயணிகளுடன் பயணித்த தனியார் சொகுசு
Published October 22, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
கொழும்பிலிருந்து மன்னார் நேற்று செவ்வாய்க்கிழமை (21) இரவு பயணிகளுடன் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று மன்னார்-மதவாச்சி பிரதான வீதி பெரிய கட்டு பகுதியில் இன்று புதன்கிழமை விபத்திற்குள்ளாகியுள்ளது.
பரைய நாளன் குளம் பொலிஸ் பிரிவில் குறித்த விபத்து .இடம்பெற்றுள்ளது.
குறித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிய வருகின்றது.
-குறித்த விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன