நாடு முழுதும் தேசிய பாடசாலைகளில் 36,178 ஆசிரிய வெற்றிடங்கள்.

நாட்டில் தேசிய பாடசாலைகளில் 36,178 ஆசிரிய வெற்றிடங்கள்...

Published October 22, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

நாட்டில் தேசிய பாடசாலைகளில் 36,178 ஆசிரிய வெற்றிடங்கள் நிலவுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கேள்விகளுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை பதிலளிக்கையிலே பிரதமர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

நாடு முழுவதும் 2025 மே 31ஆம் திகதியளவில் பாடசாலைகளில் நிலவிய ஆசிரியர் வெற்றிடங்களுக்கமைய தேசிய பாடசாலைகளில் 1501 வெற்றிடங்கள் காணப்பட்டன.

– மத்திய மாகாணத்தில் 6318

– கிழக்கு மாகாணத்தில் 6631

– வடக்கு மாகாணத்தில் 3271

– மேல் மாகாணத்தில் 4630

– தென் மாகாணத்தில் 2513

– வடமேல் மாகாணத்தில் 2990

– ஊவா மாகாணத்தில் 2780

– வடமத்திய மாகாணத்தில் 1568

– சபரகமுவ மாகாணத்தில் 3994 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

இதனிடையே, விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் போன்ற முக்கிய பாடப்பிரிவுகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் விரைவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆசிரியர் சேவை வெற்றிடங்களை நிரப்புவதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் அரச சேவை நியமன குழுவின் ஊடாக அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *