LATEST
ஓய்வு வயதை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதில் பிரச்சினையில்லை!இன்று பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!டெங்கு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவி பெறுங்கள்!சமிந்த விஜேசிறியின் பிணை மனுவுக்கு நீதிமன்றம் அனுமதி!காய்கறி வியாபாரிகளிடம் ஒத்துழைப்பு கோரும் பிரதேச சபை!நிலவை சிவப்பாக்கும் அரிய வானியல் நிகழ்வு!இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வருகிறார்?PHI இடமாற்ற விவகாரம் – நாடளாவிய எதிர்ப்பு!ஓய்வு வயதை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதில் பிரச்சினையில்லை!இன்று பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!டெங்கு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவி பெறுங்கள்!சமிந்த விஜேசிறியின் பிணை மனுவுக்கு நீதிமன்றம் அனுமதி!காய்கறி வியாபாரிகளிடம் ஒத்துழைப்பு கோரும் பிரதேச சபை!நிலவை சிவப்பாக்கும் அரிய வானியல் நிகழ்வு!இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வருகிறார்?PHI இடமாற்ற விவகாரம் – நாடளாவிய எதிர்ப்பு!
உள்ளூர்

மலையக மக்கள் மனு – அரசாங்கத்திடம் கையளிப்பு.

October 23, 2025 · Tamil Ceylon LK

பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை கலைப்பதற்கு எதிராக, அதனை வலுப்படுத்தி 2026 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்குமாறு கோரிய மக்கள் மனுவை மலையக அரசியல் அரங்கம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கையளித்துள்ளது.

இந்த மனு கையளிப்பு நிகழ்வு நேற்று 22.10.2025 புதன்கிழமை, பத்தரமுல்லையில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது. இதில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் மலையக அரசியல் அரங்கத்தின் உயர் பீட உறுப்பினர்கள் மயில்வாகனம் திலகராஜா, கிருஷ்ணகுமார், சுரேஷ் குமார், ஆரோக்கியம் பிரான்ஸிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அரசாங்கம் அதிகார சபையை கலைப்பதற்கு பதிலாக அதை மறுசீரமைத்து வலுப்படுத்த வேண்டும் எனவும், “அதிகார சபை குறைப்பு எந்த வடிவிலும் செய்யக்கூடாது” எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சனத்தொகைக் கணக்கெடுப்பில் “இலங்கை மலையகத் தமிழர்” என இன அடையாளம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. “இந்திய தமிழர்” என்ற பதிலாக “இந்திய வம்சாவளியினர்” என்ற புதிய பிரிவை உருவாக்கும் ஆலோசனையும் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சர் விஜித்த ஹேரத், அதிகார சபை கலைக்கப்படமாட்டாது என உறுதி அளித்ததுடன், மனுவை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related Stories

மேலும் ›