தென் கொரியாவில் களமிறங்கும் ட்ரம்ப் !
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ,மற்றும் முக்கியமான உலகத் தலைவர்கள் அடுத்த வாரம் தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய – பசிபிக் பொருளாதார மாநாட்டில் (APEC) பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில், வடகொரியா அதிநவீன ஏவுகணை சோதனை நடத்தியுள்ளமை சர்வதேசளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிய – பசிபிக் பொருளாதார மாநாட்டில் (APEC) மாநாட்டை முன்னிட்டு தென்கொரியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வடகொரிய இராணுவம் நேற்று (22) கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையை நோக்கி அதி நவீன ஏவுகணைகளை ஏவி சோதனை செய்ததாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, மாநாட்டின் போது சீன மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகள் நேரடியாக சந்திக்கவுள்ளமை உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், ரஷ்ய ஜனாதிபதியுடனான சந்திப்பை ட்ரம்ப் ரத்து செய்துள்ள நிலையில், அமெரிக்க – சீன தலைவர்களின் சந்திப்பு முக்கிய தாக்கமிக்கதாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.