மட்டக்களப்பு – பொலன்னறுவை வீதியில் கோர விபத்து.
மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியில், வாழைச்சேனை...
மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியில், வாழைச்சேனை வாகனேரி பிரதேசத்தில் நேற்று (23) மாலை ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பெண்கள் உட்பட எட்டு பேர் காயமடைந்தனர்.
வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்தவர்கள் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்றுவரும் 74 வயதுடைய வெலிகந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னால் சென்ற பவுசர் வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற வேன், எதிர்த் திசையில் வந்த டிப்பர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதே இந்த விபத்திற்குக் காரணமாகும்.
டிப்பர் வாகன சாரதியும் காயமடைந்து தற்போது வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.