இந்திய – அமெரிக்க உறவுகளை வலுப்படுத்தும் ட்ரம்ப்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி...
Published October 24, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தீபாவளியைக் கொண்டாடுவதற்காக வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் அவர் இவ்வாறு கூறினார்.
-
இந்த நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவிக்கையில்,
“இந்த நேரத்தில், இந்திய மக்களுக்கு எங்கள் அன்பான வாழ்த்துக்கள். நான் இந்தியர்களை மிகவும் நேசிக்கிறேன்.
எங்கள் இரு நாடுகளுக்கும் இடையே நல்ல ஒப்பந்தங்களை ஏற்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
நான் பிரதமர் மோடியுடன் பேசினேன். எங்களுக்கு நல்ல உறவு உள்ளது. அவர் ரஷ்யாவிலிருந்து அதிக எரிபொருள் வாங்க மாட்டார்” என்றார். என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.