T-56 தோட்டாக்களுடன் ஒருவர் கைது.
மினுவாங்கொடை, அம்பகஹவத்தை பிரதேசத்தில் கம்பஹா குற்றப்...
Published October 25, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
மினுவாங்கொடை, அம்பகஹவத்தை பிரதேசத்தில் கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் T-56 தோட்டாக்களுடன் நேற்று (24) மாலை சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடம் மேலும், 15 பயிற்சி தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 53 வயதான அம்பகஹவத்தை, மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.