கரீபியன் தீவுகள் நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க் கப்பல்.
அமெரிக்கா தனது மிகப்பெரிய போர்க் கப்பலான USS Gerald R Ford...
Published October 25, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
அமெரிக்கா தனது மிகப்பெரிய போர்க் கப்பலான USS Gerald R Ford ஐ கரீபியன் தீவுகள் நோக்கி அனுப்பியுள்ளது. இது சுமார் 90 விமானங்களை ஏற்றக்கூடிய அளவிலுள்ளது.
அண்மைக் காலமாக கரீபியன் தீவுகளில் அமெரிக்கா தனது இராணுவப் பிரசன்னத்தை அதிகரித்து வருவதாகவும் இதில் மேலும் 8 போர்க் கப்பல்கள், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் F-35 விமானங்கள் போன்றவையும் உள்ளடங்குவதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இக் கப்பலானது, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா அத்துடன் கரீபியன் தீவுகளையும் உள்ளடக்கிய அமெரிக்காவின் தெற்கு கட்டளைப் பிராந்தியத்துக்கு அனுப்பப்படுவதாக பென்டகன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.