சீனாவுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை.

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக பென்டனைல்...

Published October 25, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக பென்டனைல் போதைப்பொருள் கடத்தப்படுவதற்கு சீனாதான் காரணம் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

-ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் கருத்து தெரிவிக்கையில்,

சீன ஜனாதிபதியிடம் இதுகுறித்து நேரில் கேள்வி கேட்க இருப்பதாக தெரிவித்தார். மேலும், வெனிசுலா வழியாக சீனா பென்டனைலை அமெரிக்காவுக்குள் கடத்துவதாகவும், இதைத் தடுக்க தேவையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் எச்சரித்தார்.

இது தொடர்பாக வெனிசுலாவில் உள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் தரைவழி இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும். போர் பிரகடனத்தை நாங்கள் விரும்பவில்லை. ஆனால் அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்களை கொண்டு வருபவர்களை கொல்லப் போகிறோம்’ என்று கூறினார்.

இந்நிலையில், ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி வரும் 30ஆம் திகதி தென் கொரியாவில் நடைபெறும் APEC உச்சி மாநாட்டில் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உலகம் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *