தெற்காசியாவில் AI பயன்பாடு – இலங்கை முன்னிலை!

தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு வேகமாக...

Published October 26, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி புதிய அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. நேபாளம் மற்றும் இந்தியாவுடன் ஒப்பிடும்போது, பூட்டானும் இலங்கையும் அதிக AI பயன்படுத்தும் தொழிலாளர் சக்தியைக் கொண்ட நாடுகளாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், மனித திறன்களை மேம்படுத்தாமல் AI பயன்பாடு வேகமாக அதிகரித்தால் வேலை இழப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், குறிப்பாக அழைப்பு மையங்கள், கணக்கியல் மற்றும் மென்பொருள் துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைவதாகவும் அவ் அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் AI தொடர்பான வேலைவாய்ப்பு சந்தை வேகமாக வளர்ந்து வருவதுடன், 2025ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு அறிவிப்புகளில் 7.3% AI திறன்களைத் தேவைப்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், ChatGPT பயன்பாட்டில் மாலைத்தீவை முதலிடத்திலும் இலங்கை இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளதாகவும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

AI பயன்களை அதிகப்படுத்த, டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துதல், STEM கல்வியை விரிவுபடுத்துதல், நம்பகமான மின்சாரம் மற்றும் இணைய வசதி உருவாக்குதல் ஆகியவை அவசியம் என அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers தொழில்நுட்பம் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *