பொலிஸார் விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது.
இலங்கை பொலிஸார் நாடு முழுவதும் மேற்கொண்ட குற்றவியல்...
Published October 26, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலங்கை பொலிஸார் நாடு முழுவதும் மேற்கொண்ட குற்றவியல், போதைப்பொருள் ஒழிப்பு விசேட சோதனையின் கீழ் பல்வேறு குற்றச் சம்பவங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது 27,890 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
-
பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 743 பேரும்,
-
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 253 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேலும், மதுபோதையில், கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமை தொடர்பில் மேலும் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.