பொய்யான வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றும் அரசாங்கம் – சஜித் குற்றச்சாட்டு.
பாதாள உலகம் ஆளும் சூழலை தற்போதைய அரசாங்கம்...
பாதாள உலகம் ஆளும் சூழலை தற்போதைய அரசாங்கம் உருவாக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.
இரத்தினபுரி மாவட்டம் இறக்குவானைத் தொகுதி வெலிகெபொல வட்டாரத்தில் நேற்று (25) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய அங்கத்தவர் சேர்க்கை நிகழ்வில் கலந்து அவர் இதனை தெரிவித்தார்.
-
சஜித் மேலும் தெரிவிக்கையில்,
மக்கள் ஆதரவால் ஆட்சியைப் பெற்றவர்கள் இப்போது சுகபோகங்களை அனுபவிக்கின்றனர். நாட்டில் கொலை கலாச்சாரம் பரவி, பிரதேச சபைகளும் நீதிமன்றங்களும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல்கள் அதிகரித்து, அரசாங்கத்தின் இயலாமையால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்றும், பொய்யான வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றும் அரசாங்கம் இன்று நாட்டை நாசப்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், நவீன தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி நமது நாட்டில் விவசாயத்தை முன்னேற்றம் காணச் செய்யலாம் என நான் கூறும் போதும் அதற்கும் கிண்டல் செய்து சேறு பூசுகின்றனர்.
நவீன தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத் துறையில் நெதர்லாந்து முன்னேற்றம் கண்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், குறிப்பிட்ட நிலப்பரப்பில் அதிக அறுவடைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.