வெள்ளம்பிட்டிய வீட்டின் முன் கைக்குண்டு மீட்பு.
வெள்ளம்பிட்டிய டொனால் பெரேரா வீதியில்...
Published October 27, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
வெள்ளம்பிட்டிய டொனால் பெரேரா வீதியில் உள்ள அல்பா வீடமைப்பு தொகுதியில், ஒரு வீட்டின் முன் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்று (26) இரவு வீட்டின் உரிமையாளர் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமான பொருளைக் கண்டு, 119 அவசர எண் மூலம் பொலிஸாருக்கு தகவல் அளித்தார்.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று கைக்குண்டை மீட்டனர். அது பழைய கைக்குண்டு என உறுதி செய்யப்பட்டுள்ளது.
குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு அதிகாரிகள் வந்து அதனை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும், சம்பவம் குறித்து வெள்ளம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.