அக்டோபரில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு.

நாட்டில் அக்டோபர் மாதத்தின் கடைசி 03 வாரங்களில்...

Published October 27, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

நாட்டில் அக்டோபர் மாதத்தின் கடைசி 03 வாரங்களில் மட்டும் கிட்டத்தட்ட 120,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய அக்டோபர் 23 ஆம் தேதி நிலவரப்படி, 119,670 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக அதிகாரசபை கூறுகிறது.

அதன்படி, கடந்த ஆண்டில் 1,845,164 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இதற்கிடையில், நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர சுற்றுலா தொழில்முனைவோர் சங்கம் தெரிவித்துள்ளது.

அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர சுற்றுலா தொழில்முனைவோர் சங்கத்தின் தலைவர் சமீர சேனக டி சில்வா, சுற்றுலாத் துறையில் வசதிகளை மேம்படுத்துவதற்கு ஒரு முறையான வேலைத்திட்டம் அவசரமாக வகுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *