கரூர் – பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்தார் த.வெ.க தலைவர் விஜய்.
தமிழ்நாடு - கரூரில் கடந்த மாதம் 27 ஆம் திகதி தவெக...
தமிழ்நாடு – கரூரில் கடந்த மாதம் 27 ஆம் திகதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
தொடர்ந்து த.வெ.க தலைவர் விஜய், இச் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது.
பின்னர் கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க த.வெ.க தலைவர் விஜய் முடிவு செய்த நிலையில், கரூர் செல்வதற்கு அனுமதியும் இடமும் வழங்கப்படாததன் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களைச் சென்னைக்கு வரவழைத்து நேரில் சந்திக்க விஜய் முடிவு செய்தார்.
இதனையடுத்து இன்று சென்னை மாமல்லபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்துள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தனித்தனியாகச் சந்தித்து த.வெ.க தலைவர் விஜய் ஆறுதல் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை கரூர் சனநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தின் மருத்துவ, கல்வி செலவுகளை தான் முழுவதுமாக ஏற்பதாகவும் மற்றும் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடுகள் செய்து தருவதாகவும் த.வெ.க தலைவர் விஜய் உறுதியளித்துள்ளார்.