“அஸ்வெசும” இரண்டாம் கட்ட பயனாளிகளுக்கான அறிவிப்பு.
"அஸ்வெசும" இரண்டாம் கட்ட பயனாளிகளுக்கான...
Published October 29, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
“அஸ்வெசும” நலன்புரி நன்மைகள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு தகுதி பெற்றும், இதுவரை வங்கிக் கணக்குகளைத் திறக்காத பயனாளிகள், தங்கள் பிரதேச செயலகத்துக்கு சென்று கடிதத்தைப் பெற வேண்டும்.
பிறகு அந்த கடிதத்தை மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை வங்கி அல்லது பிரதேச அபிவிருத்தி வங்கியின் எந்தவொரு கிளையிலும் சமர்ப்பித்து வங்கிக் கணக்கைத் திறக்க வேண்டும்.
அதன்படி, இதுவரை வங்கிக் கணக்குகளைத் திறக்காத, ‘அஸ்வெசும’ இரண்டாம் கட்டத்திற்கு தகுதிபெற்ற பயனாளிகள், விரைவில் இந்த வங்கிக் கணக்குகளைத் திறந்து, குறித்த வங்கிக் கணக்கு விபரங்களை பிரதேச செயலகங்களுக்கு வழங்க வேண்டும் என அந்த அறிவித்தல் மூலம் அறியப்படுத்தப்பட்டுள்ளது.