இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் – அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் சந்திப்பு.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் - அமெரிக்க வெளியுறவுத்துறை...
Published October 29, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் – அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவுக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
மலேசியாவில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்க வருடாந்த உச்சிமாநாட்டின் பின்னணியில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவை கோலாலம்பூரில் சந்தித்தார்.
இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்புச் உறவுகள், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து கருத்துகள் பரிமாறப்பட்டுள்ளன. மேலும், சமூக ஊடகங்களில் இந்த சந்திப்பை பாராட்டியதாகவும், இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.