குச்சவெளி தவிசாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது ! #Video
குச்சவெளி பகுதியில் காணி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக...
Published October 31, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
குச்சவெளி பகுதியில் காணி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக இலஞ்சம் வாங்கும்போது, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சோதனைப் பிரிவின் அதிகாரிகளால் குச்சவெளி பிரதேச சபைத் தலைவர் இன்று (31) காலை கைதுசெய்யப்பட்டார்.
அவர், 5 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற முனைந்தபோது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர், தற்போது திருகோணமலை – நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.