கோவிலில் நெரிசலில் 12 பேர் பலி
ஆந்திர பிரதேசம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் காசிபுக்கா என்ற பகுதியில் வெங்கடேஸ்வரா சுவாமி என்ற கோவில் உள்ளது. ஏகாதசியை முன்னிட்டு கோவிலுக்கு பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொண்டுள்ளனர்.
Published November 1, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ஆந்திர பிரதேசம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் காசிபுக்கா என்ற பகுதியில் வெங்கடேஸ்வரா சுவாமி என்ற கோவில் உள்ளது.
ஏகாதசியை முன்னிட்டு கோவிலுக்கு பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொண்டுள்ளனர். அப்போது, திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
பெண்கள், குழந்தைகள் உள்பட 12 பேர் பலியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கூட்ட நெரிசலில் பலர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகேயுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, பொலிஸார் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்று கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.