LATEST
பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!மனித உரிமைகள், நல்லாட்சி குறித்து இலங்கையிடம் EU எதிர்பார்ப்பு!நீர் திட்டத்தை மீள ஒப்படைக்கக் கோரி கிராம மக்கள் போராட்டம்!இறுதிச் சடங்கிற்கு தயாரான குடும்பம் – உயிருடன் வந்த நபர்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் – மனுவில் வலியுறுத்தல்!குறைந்த வருமான குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புதிய கல்வி உதவி!உள்நாட்டு அரிசி உபரி இருக்க இறக்குமதி ஏன்? – சஜித் கேள்வி!ஓய்வு வயதை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதில் பிரச்சினையில்லை!பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!மனித உரிமைகள், நல்லாட்சி குறித்து இலங்கையிடம் EU எதிர்பார்ப்பு!நீர் திட்டத்தை மீள ஒப்படைக்கக் கோரி கிராம மக்கள் போராட்டம்!இறுதிச் சடங்கிற்கு தயாரான குடும்பம் – உயிருடன் வந்த நபர்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் – மனுவில் வலியுறுத்தல்!குறைந்த வருமான குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புதிய கல்வி உதவி!உள்நாட்டு அரிசி உபரி இருக்க இறக்குமதி ஏன்? – சஜித் கேள்வி!ஓய்வு வயதை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதில் பிரச்சினையில்லை!
உள்ளூர்

சந்தேகநபர் ஒருவர் கைது

November 1, 2025 · Tamil Ceylon LK

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) மொரடுவை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் காயப்படுத்திய குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர், ஹெரோயினுடன் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளார். 

கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், தமன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹிக்குராண பிரதேசத்தில் சுற்றிவளைப்பை மேற்கொண்டு இந்த நபர் கைது செய்யப்பட்டார். 

குறித்த சந்தேகநபர், கடந்த ஜூலை 11ஆம் திகதி ஹிரண பிரதேசத்தில் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தியமை மற்றும் பாணந்துறை பொலிஸ் பிரிவில் ஒருவரைக் கொலை செய்யத் திட்டமிட்டமை ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேகநபரை கைது செய்யும் போது, அவரிடமிருந்து 13 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் 39 வயதுடைய ஹிக்குராண பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இந்தச் சந்தேகநபர் குறித்து தமன மற்றும் ஹிரண பொலிஸ் நிலையங்களும், பாணந்துறைப் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

Related Stories

மேலும் ›