தன்சானிய தேர்தல் வன்முறை : 3 நாட்களில் 700 பேர் பலி !
தன்சானியாவில் கடந்த புதன்கிழமை (ஒக்டோபர் 29) நடந்த பொதுத் தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்ட போராட்டங்களில் கடந்து மூன்று நாட்களுக்குள் சுமார் 700 பேர் உயிரிழந்திருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

முக்கிய வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாமல் தடை செய்யப்பட்டதால், எதிர்க்கட்சியை நசுக்கும் வகையில் இந்தத் தேர்தல் நடத்தப்பட்டதாகக் கூறி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன
கடந்த 3 நாட்களுக்குள் தலைநகர் டார் எஸ் சலாமில் சுமார் 350 பேரும், மவான்ஸா (Mwanza) நகரில் 200-க்கும் மேற்பட்டோரும் கொல்லப்பட்டதாகவும், பிற பகுதிகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் சேர்த்து, மொத்த பலி எண்ணிக்கை சுமார் 700 ஆக இருக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன