ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினர் சமபோஷ கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினரான சமபோஷ என அழைக்கப்படும் மதுசங்க

Published November 3, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினரான சமபோஷ என அழைக்கப்படும் மதுசங்க என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் பாரியளவான போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘வெல்லே சாரங்கா’ என்ற கமகே சாரங்கா பிரதீப்பின் நெருங்கிய கூட்டாளி என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் கொழும்பு வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவால் கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 26 கிராம் 890 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் ஐந்து கொலைகளுடன் தொடர்புடையவர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *