ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளதோடு, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 320 என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் இன்று (3) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 6.3 மெக்னிடுயிட்டாக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்த நிலையில், அதிகாலை உறங்கிக்கொண்டிருந்த பலரும் வீடுகளை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்நாட்டின் இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் பல்ஹா மாகாணம் மசிர் ஐ ஷெரிப் நகரை மையமாகக் கொண்டு 28 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அச்சம் காணப்படுவதாக கூறப்படுகின்றது
மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி ஆப்கானிஸ்தானில் 6.0 ஆக பதிவான நிலநடுக்கத்தால் 2 ஆயிரத்து 200 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.